‘மெர்சல்’ டிக்கெட் முன்பதிவு: ஆரம்பிக்க காத்திருக்கும் திரையரங்குகள்
அக்டோபர் 18-ம் தேதி வெளியாகவுள்ள 'மெர்சல்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு, பல்வேறு திரையரங்குகள் காத்திருக்கின்றன.
கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்க டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இப்பேச்சுவார்த்தை நேற்று (அக்டோபர் 13) சுமுகமாக முடிவுற்றது.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் டிக்கெட் கட்டண விவரங்கள் மற்றும் 8% கேளிக்கை வரி உள்ளிட்டவற்றை தெளிவுப்படுத்தினார்கள். இதனால் 'மெர்சல்' வெளியீட்டில் எவ்வித பிரச்சினையுமில்லை என்று தகவல் வெளியானது.
இன்று (அக்டோபர் 14) காலை முதலே சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் 'மெர்சல்' முன்பதிவு தொடங்கப்பட்டது. சில முக்கிய திரையரங்குகளில் இன்னும் 'மெர்சல...
