தடைகளை உடைத்த விஜய்யின் மெர்சல் வசூலில் சாதிக்குமா ?
வரி விலக்கு இருந்த போது அதிக விலைக்கு டிக்கட் விற்க கூடிய சூழலில் விஜய் நாயகனாக நடித்து வெளியான துப்பாக்கி, தெறி ஆகிய படங்கள் மட்டுமே வசூலில் 45 கோடியை(ஷேர்) கடந்த படங்கள். அந்த படங்களின் பட்ஜெட், விஜய் வாங்கிய சம்பளம் குறைவு.
மெர் சல் படத்திற்கான பட்ஜெட் 125 கோடிக்கு மேல் என்கிறது தயாரிப்பு தரப்பு. தமிழ் படங்களின் வியாபார எல்லைகள் விரிவடைந்தாலும் பிரதான வசூல் தளமாக இருக்கும் தமிழ்நாட்டில் வசூல் குறைவாக உள்ளது.
திரைத்துறையினருக்கும் – தமிழக அரசுக்கும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுக்கு இரு தரப்பும் வந்துள்ளனர். ஏற்கெனவே மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட கட்டணத்தில் மாறுதல் இல்லை.
தமிழ்நாடு முழுவதும்தனி திரையரங்குகளுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிக பட்சம் 100 ரூபாய் எனவும் A/C அல்லாத தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் அதிக பட்டம் 8 ...
