மெர்சல் பாடல்கள்… ரகசியம் உடைத்த பாடலாசிரியர்!
மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனக்கு பாடல் எழுதும் பாக்கியம் கிடைத்ததாக பாடலாசிரியர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளர்.
36 வயதினிலே படத்தில் வாடி ராசாத்தி, இறைவி படத்தில் மதினி, கபாலி படத்தின் உலகம் ஒருவனுக்கா உள்ளிட்ட பல பாடல்களை எழுதியவர் விவேக். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படத்தில் விவேக் பாடல் எழுதியுள்ளார். மெர்சல் படத்தின் ஆடியோ ஆகஸ்டு 20ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’மெர்சல் படத்திற்காக பாடல்களை எழுதியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல் எழுத ஒருசில பாடலசிரியர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ ஆகியோருக்கு நன்றி. தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாடல் எழுதிய உற்சாகத்தோடு மேலும் பயணிக்க இருக...