‘மேயாத மான்’ – திரை விமர்சனம் (செம ஜாலி லவ் படம்) Rank 4/5
ஒன்சைடு காதல் சென்னை பசங்க காதல் மற்றும் தோல்வி பீலிங்கை, கலகலப்பாக சொல்லியிருக்கும் ஒரு ரகளையான படம் தான் இந்த ‘மேயாத மான்’. படம் பார்த்தால் கவலை போகும் மனசு லேசாகும் கொடுத்த காசுக்கு அதிகமான சந்தோசம் கண்டிப்பாக உண்டு இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு வந்த மேலும் ஒரு சிறந்த இயக்குனர் நட்பையும் காதலியும் நண்பனின் தங்கை காதலி இப்படி பல விஷயங்களை ரெகுலர் பார்முலா இல்லாமல் சிறப்பாக சொல்லி இருக்கும் படம் ‘மேயாத மான்’
கல்லூரியில் படிக்கும் போது ஹீரோயின் பிரியா பவானி சங்கரை ஒன்சைடாக மூன்று ஆண்டுகள் காதலிக்கும் ஹீரோ வைபவ், அவரிடம் தனது காதலை சொல்லாமலேயே இருந்துவிட, பிரியா பவானிக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்று தனது நண்பர்களிடம் கூறுகிறார். அவரை காப்பாற்றுவதற்காக பிரியாவிடம் உதவி கேட்கும் நண்பர்கள், தாங்கள் எழுதி கொடுத்ததை பிரியாவை பேச சொல்ல, அதில் இருந்து பிரி...