டான் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)
சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
சிறுவயதிலிருந்தே அப்பாவிற்கு பயந்து வளரும் ஹீரோ சிவகார்த்திகேயன், அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வருகிறார். இறுதியில் அவர் நினைத்தது நடந்ததா? தான் ஆசைப்பட்டதை சாதித்தாரா? என்பதே டான் படத்தின் ஒன்லைன். சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, பாலா, விஜய், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ். ஜெ. சூர்யா என பலர் நடித்துள்ளனர். வழக்கம்போலவே இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் மிகவும் சார்மிங்காக, ரசிகர்களை ஈர்க்கும் வசீகரமாக காட்சியளிக்கிறார். இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளா...