*அரைச்ச சந்தனம், தண்டட்டி கருப்பாயி வரிசையில், “அடி ஆத்தி” பாடல்!* *பாடலாசிரியர் முருகன் மந்திரம் மகிழ்ச்சி.*
*அரைச்ச சந்தனம், தண்டட்டி கருப்பாயி வரிசையில், “அடி ஆத்தி” பாடல்!*
*பாடலாசிரியர் முருகன் மந்திரம் மகிழ்ச்சி.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சைரன். இந்தப் படத்தில் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதிய, “அடி ஆத்தி” பாடல் ஹிட் பாடலாக மாறி இருக்கிறது. இது பற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறுகையில்,
ரொம்ப சந்தோஷமா இருக்கு. சைரன் படத்தின் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் சார், இந்தப் பாடலுக்கான சூழலை என்னிடம் சொல்லும் போதே, இது தமிழ் மக்களின் குடும்பப் பாடலாக மாறும்ணு தோணிச்சு. அதுவும் ஜீவி பிரகாஷ் ட்யூன் கேட்ட உடனே கண்டிப்பா ஹிட் தான்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே பெரிய அளவில் பாடல் மக்களிடம் போய...
