சத்யவான் சாவித்திரி – திரை விமர்சனம் (Rank 3.5/5)
சத்யவான் சாவித்திரி – நீதிமன்றத்தில் அனல் பறக்கும் அறிவுப் போர்!
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதலில் எதிர்பாராத திரில்லர் அனுபவம்!
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிவரும் நீதிமன்றப் பின்னணியிலான திரைப்படங்கள், வழக்கமான வாதப் பிரதிவாதங்களையும் தீர்ப்புகளையும் மையமாகக் கொண்டிருக்கும். ஆனால், அந்தப் பாதையிலிருந்து விலகி, நீதிமன்றத்தை ஒரு விறுவிறுப்பான திரில்லர் களமாக மாற்றியிருக்கிறது சத்யவான் சாவித்திரி திரைப்படம்.
ஆரம்பத்தில் ஒரு சாதாரண கோர்ட் டிராமாவாகத் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களையும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் உள்ளடக்கி, ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை வழங்குகிறது.
கோயம்புத்தூரில் வசிக்கும் மிகப்பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராக உயர வேண்டும் என்பதே அவரது லட்சியம்....
