Thursday, November 19
Shadow

ரஜினியுடன் தமிழில் அறிமுகம்… இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணம்! ராம் பொத்தினேனியின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்!

ரஜினியுடன் தமிழில் அறிமுகம்… இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணம்! ராம் பொத்தினேனியின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்!

தெலுங்குத் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் ராம் பொத்தினேனி, தற்போது அடுத்தடுத்த புதிய முயற்சிகள் மூலம் தென்னிந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒருபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு, மறுபுறம் எழுத்தாளர், இயக்குநர் எனப் புதிய பொறுப்புகளை ஏற்று உருவாக்கும் திரைப்படம் என அவரது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இதில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் #RAPO23 திரைப்படம். சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, கதையின் மையக் கதாபாத்திரமான ‘லோன் வுல்ஃப்’ குறித்த முதல் அறிமுகத்தை வழங்கியுள்ளது.

வழக்கமான ஹீரோ அறிமுகப் போஸ்டர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் போஸ்டரில், பிரம்மாண்டமான கட்டிடத்தின் படிக்கட்டுகளில் கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி நிற்கிறார் ராம் பொத்தினேனி. கருப்பு நிற உடை, வித்தியாசமான V வடிவ ஹேர்ஸ்டைல், தலையின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள டாட்டூ என அவரது தோற்றமே பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் டெடி பியரும் வைத்திருக்கும் காட்சியமைப்பு கதாபாத்திரத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது.

‘தனக்கான பாதையைத் தானே தேர்ந்தெடுத்து, உலகத்தைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமையான, சுதந்திரமான மனிதன்’ என்பதே லோன் வுல்ஃப் கதாபாத்திரத்திற்குப் படக்குழு அளித்துள்ள விளக்கம். இந்த அறிமுகம் படத்தின் கதைக்களம் மற்றும் ராம் பொத்தினேனி ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிப்புடன் கூடிய க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ராம் பொத்தினேனி, தற்போது கதை எழுதி இயக்குநராகவும் களமிறங்கியிருப்பது இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். கிருஷ்ணா பொத்தினேனி தயாரிப்பில் ராப்போ சினிமேட்டிக்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு) ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றுகிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஏ.எஸ். பிரகாஷ் மேற்கொள்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மற்றும் கெவின் வடிவமைக்கின்றனர்.

இதற்கிடையே, ராம் பொத்தினேனியின் மற்றொரு முக்கியத் திரைப்பயணமாக #DHARMAN திரைப்படம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் ராம் பொத்தினேனி. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறார் ராம் பொத்தினேனி. ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களைச் சந்திக்கவிருக்கும் அவர், மறுபுறம் இயக்குநராகத் தனது திறமையை நிரூபிக்க #RAPO23 படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒரு நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது எழுத்து, இயக்கம் எனப் புதிய பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் ராம் பொத்தினேனியின் இந்த நகர்வுகள் அவரது திரைப்பயணத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

#DHARMAN | #RAPO23

நடிகர்கள்: ராம் பொத்தினேனி, ரிதேஷ் தேஷ்முக், சம்யுக்தா.

தொழில்நுட்பக் குழு:

  • எழுத்து, இயக்கம்: ராம் பொத்தினேனி
  • தயாரிப்பு: கிருஷ்ணா பொத்தினேனி
  • தயாரிப்பு நிறுவனம்: ராப்போ சினிமேட்டிக்ஸ்
  • ஒளிப்பதிவு: திருநாவுக்கரசு (திரு)
  • இசை: சாம் சி.எஸ்
  • சண்டைப் பயிற்சி: பீட்டர் ஹெய்ன், கெவின்
  • தயாரிப்பு வடிவமைப்பு: ஏ.எஸ். பிரகாஷ்

From Sharing Screen Space with Rajinikanth to Turning Director: Ram Pothineni Embarks on an Exciting New Journey!

Energetic Star Ram Pothineni is gearing up for an exciting new phase in his career, making significant moves across the Telugu and Tamil film industries. While he is set to make his much-awaited Tamil debut alongside Superstar Rajinikanth, the actor is also taking on an entirely new creative challenge by stepping into the roles of writer and director with his ambitious project #RAPO23.

Among his upcoming ventures, #RAPO23 has particularly caught the attention of moviegoers. Marking International Men’s Day, the makers unveiled an intriguing pre-look poster introducing the film’s central character as a ‘LONE WOLF’. The unusual reveal has sparked considerable curiosity about the film’s storyline and the character played by Ram Pothineni.

Moving away from conventional hero-introduction posters, the pre-look presents Ram in a mysterious avatar. He is seen standing with his back towards the camera on a flight of stairs inside a massive architectural structure. Dressed in black, he sports a distinctive V-shaped hairstyle and a tattoo on the back of his head. The striking visual of him holding a gun in one hand and a teddy bear in the other creates an unusual contrast, adding another layer of intrigue to his character.

The makers describe a Lone Wolf as “a fiercely independent man who chooses his own path and faces the world alone.” This character introduction hints at a story centred on individuality, independence and inner strength, while leaving audiences curious about the world the film intends to explore.

Interestingly, #RAPO23 marks a major creative milestone for Ram Pothineni, as he takes complete charge of the writing and direction. The film is being produced on a lavish scale by Krishna Pothineni under the banner of Rapo Cinematics.

Bollywood actor Riteish Deshmukh plays a pivotal role in the film, marking his Telugu cinema debut. Samyuktha plays the female lead. National Award-winning cinematographer Thirunavukarasu (Thirru) handles the cinematography, while Sam CS is composing the music. AS Prakash oversees the production design, with Peter Hein and Kevin choreographing the action sequences.

Meanwhile, Ram Pothineni is also preparing for another significant milestone with #DHARMAN. Produced by Kamal Haasan, the film brings Ram together with Superstar Rajinikanth for the first time. The project also marks Ram’s much-awaited entry into Tamil cinema. Directed by Ashwath Marimuthu, with music composed by Anirudh Ravichander, #DHARMAN has already generated considerable excitement among fans.

With two distinctive projects on the horizon, Ram Pothineni is exploring new dimensions of his career. While #DHARMAN will introduce him to Tamil audiences alongside one of Indian cinema’s biggest superstars, #RAPO23 will give him an opportunity to showcase his creative vision as a writer and director.

Having established himself as a popular actor, Ram is now expanding his horizons behind the camera as well. His transition into direction, alongside his highly anticipated collaboration with Rajinikanth, makes this an exciting phase in his career. All eyes are now on the upcoming title glimpse and first look of #RAPO23, which are expected to reveal more about the mysterious world of the ‘LONE WOLF’.

#DHARMAN | #RAPO23

CAST: Ram Pothineni, Riteish Deshmukh, Samyuktha.

TECHNICAL CREW:

  • Writer & Director: Ram Pothineni
  • Producer: Krishna Pothineni
  • Production Banner: Rapo Cinematics
  • Cinematography: Thirunavukarasu (Thirru)
  • Music: Sam CS
  • Stunts: Peter Hein, Kevin
  • Production Design: AS Prakash