எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றினார்கள் ..இயக்குனர் விக்ரமன் பேச்சு
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன்.நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன்.மற்ற விஷயங்களை பேச மாட்டேன்.ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது..நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு.ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில ...