வெளிவரமுடியாமல் முடங்கி கிடக்கும் 400 படங்கள்: நாசர் கண்ணீர்
தணிக்கை செய்யப்பட்டும் 400 படங்கள் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். அவரது மகன் லுத்புதீன் ஹீரோவா நடித்துள்ள பறந்து செல்லவா படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதாவது:
கலைத்துறையில் கால் நூற்றாண்டை கடந்தவன் நான். திரைத்துறை எப்படி வளர்ந்தது, எப்படி பாதிக்கப்பட்டது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற அனைத்தும் எனக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 4 படங்களை தயாரித்தவன். அதில் நிறைய இழந்தவன். இப்போது படம் எடுப்பது சிரமமே இல்லை 10 லட்சத்திலும் படம் எடுக்கலாம், 100 கோடியிலும் படம் எடுக்கலாம். ஆனால் அதை வெளியிடுவதுதான் இன்றைக்குள்ள பெரும் பிரச்சினை. எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்ட சுமார் 400 படங்கள் வெளிவரமுடியால் முடங்கிக்...