நாடோடிகள் 2 முடிந்தது விரைவில் “நாடோடிகள் 3” சமுத்திரகனி அதிரடி அறிவிப்பு
நாடோடிகள் 2 படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து, விரைவில் நாடோடிகள் 3 படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என இயக்குநர் சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நாடோடிகள்’.
2009-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்றது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். நந்தகோபால் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக இன்று (ஜுன் 8ம் தேதி) முடிவுற்றது. இதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மேலும், ‘நாடோடிகள் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி....
