பின்னணி பாடகரும், நடிகருமான நகுல் பிறந்த தினம்
இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார். இதை தொடர்ந்து காதலில் விழுந்தேன், மாசிலா மணி, நான் ராஜவாக போகிறேன் மற்றும் வல்லினம் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்
பாய்ஸ் அமளி துமளி, பிரம்மா .காம், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், செய், நாரதன், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, காதலில் விழுந்தேன்
இவர் பின்னணி பாடிய படங்கள்
நடிகர் விக்ரம் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "அந்நியன்" படத்தில் "காதல் யானை" பாடல், நடிகர் சூர்யா நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "கஜினி" படத்தில் "எக்ஸ் மச்சி" பாடல், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேட்டையாடு விளையாடு படத்தில் "மஞ்சள் வெயில்" மற்றும் "கற்க கற்க" பாடல், நடிகர் சிம்...
