பிரபல விளம்பரத்தை படத்தலைப்பாக்கிய மகேந்திரன்
‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது நாயகனாக உயர்ந்திருப்பவர் மகேந்திரன்.
இவர் நடிப்பில் தற்போது ‘ரங்கராட்டினம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இதில் மகேந்திரன் ஜோடியாக ஷில்பா நடித்திருக்கிறார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சுந்தரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒளிபரப்புவதற்கு முன்பாக ‘நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு...’ என்று புகைப்பிடிப்பதற்கு எதிரான விளம்பரம் ஒன்று திரையிடப்படும்.
தற்போது இந்த வசனத...
