மீண்டும் படம் இயக்கபோகும் டி.ஆர். நாயகியாக நமீதா
இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பல முகங்கள் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் கடைசியாக இயக்கி, நடித்த படம் ‘வீராசாமி’. மும்தாஜ் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 2007-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
அதன்பின் எந்தப் படத்தையும் இயக்கி, நடிக்காத டி.ஆர்., 2017-ம் ஆண்டு வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மயில்வாகனன் என்ற கேரக்டரில் தொலைக்காட்சி உரிமையாளராக நடித்தார்.
அதேபோல், சேதுராமன் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் தான் கடைசியாக அவர் பாடினார். சிம்பு இசையமைத்த இந்தப் ப...