நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள இத்தனை பேர் போட்டியா?
‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமகமானவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் சுமார் 13 வருடங்களை கடந்து முன்னணி நாயகனாக வலம் வரும் இவர் சமீபத்தில் அவரது டுவிட்டர் பக்கத்தில் பெண் தேடுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டார்.
விருப்பமுள்ளவர்கள் தங்களை பற்றிய பெயர், படிப்பு, குடும்ப விவரங்களை தெரிவிக்கும்படி தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 37 வயதாகும் ஆர்யா குறித்து சினிமாவில் பல கிசுகிசுக்கள் வந்துள்ள போதிலும் இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏ\ற்படுத்தியுள்ளது.
இவர்களில் 18 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் தனக்கு பொருத்தமான மணமகளை ஆர்யா விரைவில் த...