டிரெய்லரே இல்லாமல் திரைக்கு வரும் நானியின் ‘தி பாரடைஸ்’ – செப்டம்பர் 24-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
டிரெய்லரே இல்லாமல் திரைக்கு வரும் நானியின் ‘தி பாரடைஸ்’ – செப்டம்பர் 24-ல் உலகம் முழுவதும் வெளியீடு!
“வன்முறையைத் தாண்டி ஒரு அழகான தாய்–மகன் உணர்வை பேசும் படம்” – நானி | “ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவம் புதிதாக இருக்கும்” – ஸ்ரீகாந்த் ஒடேலா
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘தி பாரடைஸ்’. அதிரடி ஆக்ஷன், அழுத்தமான உணர்வுகள் மற்றும் சமூகப் பின்னணியை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாள...
