நயன்தாராவுக்கு வந்த தைரியம் வேறுயாருக்கும் வராது
முப்பதை வயதைத் தாண்டிய பல நடிகைகள் திருமணம், குழந்தை, குடும்ப வாழ்க்கை என்று செட்டிலாகி விட்டார்கள். ஆனால் இப்போதும் தமிழ்சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
அவர் தேர்ந்தெடுத்து நடிக்கின்ற படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான ரசனைக்கு கியாரண்டியாக இருந்தாலும், செண்டிமெண்ட்டாக படங்கள் ஹிட்டாவதும் இளம் ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர ஆசைப்படுவதும் மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பதற்கு முக்கிய காரணங்கள்.
அதிலும் சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா புதிதாக ஒரு படத்தை கமிட் செய்திருப்பது தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஆமாம், அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘டிமாண்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார் நயன்.
இந்த விஷ...