
‘ஹஷ்’ பட பாணியில் உருவாகும் ‘கொலையுதிர் காலம்
சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகவிருக்கும் 'கொலையுதிர் காலம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அப்போஸ்டர் இணையத்தில் பரவலாக அனைவராலும் பேசப்பட்டது.
'உன்னைப்போல் ஒருவன்' மற்றும் 'பில்லா 2' படங்களின் இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கவிருக்கும் இப்படத்தை இசையமைப்பாளர் யுவன், பூஜா பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்க இருக்கிறார்.
இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான 'ஹஷ்' படப் பின்னணியைக் கொண்டு உருவாக இருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் திரைக்கதை.
இப்படத்தில் பெண் எழுத்தாளர் வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறாரா அல்லது தமிழுக்கு ஏற்றவாறு ஏதேனும் மாற்றியிருக்கிறார்களா என்பது விரைவில் தெரியவரும். அடு...