நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனரை பற்றி நாஞ்சில் சம்பத் என்ன சொன்னார் தெரியுமா
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' அதன் தீவிரமான விளம்பரங்கள் மூலம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் யூடியூபர் குடும்பமும் தொடர்ச்சியாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தாக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. அதில் அதிகம் பேசப்படும் நபர், அனைவரது கவனத்தையும் திசை திருப்பியிருப்பவர் யார் தெரியுமா? அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியிருக்கும் நாஞ்சில் சம்பத் தான். சினிமா பயணத்தை துவங்கும் முன்பே, அவருடைய தன்னிச்சையான கருத்துக்களுக்காக மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துள்ளார். அவரது முத்திரையான வாக்கியம் "துப்புனா தொடச்சிக்குவேன்" ஒரே இரவில் மிகவும் பிரபலமானது. இந்த பிரபலமான வரிகள் தற்போது டி-ஷர்ட்டிலும் பதிக்கப்பட்டு மிக அதிகமாக விற்பனை ஆகின்றன.
நாஞ்சில் சம்பத் இதை பற்றி கூறும்போது, "ஒரு செய்தி சேனல் நேர்காணலில் ...