தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகர் நித்தின் சத்யா முதல் படத்தின் நாயகன் ஜெய்
ஒரு சில நடிகர்களுக்கு சினிமா மீதான காதல் வெறும் நடிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை . தயாரிப்பாளராகி மக்களை மகிழ்விக்கும் படங்களை தருவதிலும் அவர்கள் முனைப்போடு இருப்பார்கள். பல அருமையான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். 'SHVEDH' என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார்.
இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், '' தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனேயே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும்.
இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பர் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவ...
