ஓடு ராஜா ஓடு – திரை விமர்சனம்
டார்க் காமெடி என்ற பெயரில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஓடு ராஜா ஓடு இந்த படத்தில் ஜோக்கர் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் மற்றும் லக்ஷ்மி பிரியா, ஆனந்த சாமி நாசர்மற்றும் பலர் நடிப்பில் தோஷ் நந்தா இசையில் ஜதின் சங்கர் ராஜ், சுனில் சி.கே.இந்த இரட்டை ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவில்
ஜதின் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் ஓடு ராஜா ஓடு
சென்னையில் கதாசிரியராக இருக்கிறார் நாயகன் குருசோம சுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி படம் பார்க்க ஆசைப்படுகிறார். இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து வாங்க சொல்லுகிறார்.
அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.
...