ஒரு கனவுபோல – திரை விமர்சனம் (நட்பின் சிகரம்) Rank 3/5
ஒரு கனவு போல நீண்ட இடைவெளிக்கு பின் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் என்று சொன்னால் மிகையாகது இதில் நட்பும் மட்டும் இல்லாமல் கணவன் மனைவி மீது வைக்கும் நம்பிக்கை தான் முக்கியம் என்பதையும் மிக அழகாக சொல்லும் படம் தான் இந்த படம் இயக்குனர் இந்த கதையை மிக நேர்த்தியாக திரைகதை மூலம் வெற்றி கண்டுள்ளார் என்று தான் சொல்லனும்
இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர் ,அமலா ரோஸ், அருள்தாஸ் சார்லி மற்றும் பலர் நடிப்பில் ராம் இ,எஸ் இசையில் அழகப்பன் ஒளிப்பதிவில் விஜய் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஒரு கனவு போல
நாயகன் ராமகிருஷ்ணனும் - சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இர...