Paintings Of Siva Kumar “ புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் வைத்து நடைபெற்றது
Paintings Of Siva Kumar “ புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா முன்னிலையில் தமிழ் அருவி மணியன் புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் Alliance ஸ்ரீநிவாசன் , இயக்குநர் லிங்கு சாமி , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் , இயக்குநர் வசந்த் , கவிஞர் / எழுத்தாளர் அறிவுமதி , டாக்டர் சொக்கலிங்கம் , ஓவியர் AP ஸ்ரீதர் , ஓவியர் தியாகு , நடிகை ரம்யா பாண்டியன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்ல கண்ணு , கவிஞர் பிரபஞ்சன் , தனஞ்சயன் , கவிதாலயா கிருஷ்ணன் , பத்மஸ்ரீ சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சூர்யா பேசியது
அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம் ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தர்சிக்க சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75வது பிறந்த நாள். இந்த...
