50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான அரங்குகள் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி “
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.
இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.
நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.
முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - மது அம்பட்
இசை - ஸ்ரீ காந்த்தேவா
நடனம் - சிவசங்கர்
சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன்
எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.
படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..
திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜம...
