‘சேர்ந்து படம் பண்ணலாம் வாங்க இரஞ்சித்’ . பாலிவுட் இயக்குனர் , நடிகர் அனுராக் காஷ்யப் நெகிழ்ச்சி…!
பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் பேசு பொருளாகி இருக்கிறது.
சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக் . இயக்குனர் இரஞ்சித்தை
சந்திக்க வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார...
