நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை.இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு.
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் "கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" (Challenges In Education - Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர்.
கருத்தரங்கின் இறுதியாக உரை நிகழ்த்தினார், இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.இரஞ்சித். அவர் பேசியதாவது,
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான தேவையாக இந்த நிகழ்வு. ஏனென்றால் இந்த சமூக நீதியற்ற, சமத்துவமற்ற கல்விச் சூழலில் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா போன்ற சமூக ஆர்வலர்கள் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும் தான் நமக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
...
