பரோல் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பரோல் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
சிறு வயதிலேயே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் கரிகாலனிடம் (லிங்கா), சிறையில் சிலர் தகாத முறையில் நடந்துகொள்கிறார்கள். இதனால் கோபமடையும் கரிகாலன், அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியே வருகிறார்.
கரிகாலனை கஷ்டப்பட்டு வெளியே எடுக்கிறார் அவரது தாய் ஜானகி சுரேஷ். அண்ணன் கரிகாலன் மீது மட்டுமே தனது தாய் அன்பு செலுத்துகிறார் என்று சிறு வயதில் இருந்து நினைத்துக்கொண்டு இருக்கிறார் தம்பி கோவலன் (கே.எஸ். கார்த்திக்) . தனது தாய் எத்தனையோ முறை கூறியும் கொலை செய்வதை கரிகாலன் நிறுத்தவே இல்லை.
அப்படி தொடர்ந்து கொலை செய்து வரும் கரிகாலன் ஒரு முறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்கு செ...
