காரில் செக்ஸ் தொல்லை? – நடிகை பார்வதி நாயர் விளக்கம்
கேரளாவில் முன்னணி நடிகைக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பும்போதும், அவர்கள் பாதுகாப்பில் தயாரிப்பாளர்கள் அக்கறை எடுக்க வேண்டும் என்றும், அறிமுகம் இல்லாதவர்களை டிரைவர்களாக அனுப்பக்கூடாது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வற்புறுத்தி இருந்தது.
இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி நாயரும் சென்னையில் வாடகை காரில் பயணித்தபோது, தொல்லைகள் அனுபவித்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பார்வதி நாயருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது.
நடிகர்-நடிகைகள் பலரும் பார்வதி நாயரை தொடர்புகொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். பார்வதி நாயர் என்னை அறிந்தால், உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆக...
