ராஜ்கிரன், அதர்வா இவர்களில் பட்டத்து அரசன் யார்? :இயக்குனர் சற்குணம் பளிச்!
*
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள திரைபடம் ''பட்டத்து அரசன் ''. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த ''பட்டத்து அரசன்'' திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும்
25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் சற்குணம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை...