Tuesday, June 6
Shadow

Tag: #ponniyinselvan #manirathnam #subhashkaran #chiyanvikram #karthi #jayamravi #trisha #aishwaryarai #arrahman #aishwaryalakshmi

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ தயாரிப்பாளர்கள் ஒரு கோடி நன்கொடை

Shooting Spot News & Gallerys
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன...