
இலங்கை தொழில்அதிபரை நடிகை பூஜா காதல் திருமணம்
அஜித் பட ஹீரோயின் ஒருவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டர். அவர் யார் என்பதை கீழே பார்க்கலாம்.பிரபல நடிகை பூஜா. இவர் 2003-ம் ஆண்டு ‘ஜே ஜே’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார். ‘அட்டகாசம்’, ‘தம்பி’, ‘உள்ளம் கேட்குமே’, ‘ஜித்தன்’, ‘பட்டியல்’, ‘தகப்பன்சாமி’, ‘பொறி’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.பாலா இயக்கத்தில் ஆர்யாவுடன் நடித்த ‘நான் கடவுள்’ படம் பூஜாவுக்கு முக்கிய படமாக அமைந்தது. இதில் அவர் பார்வையிழந்த பெண்ணாக நடித்து இருந்தார். பூஜாவின் தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். தாய் இலங்கையை சேர்ந்தவர். இதனால் இலங்கை தலைநகர் கொழும்பில் அவர் வசித்து வந்தார். சில சிங்கள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
பூஜாவுக்கும், இலங்கையில் தொழில் அதிபராக இருக்கும் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயத...