
பவர் ஸ்டார் நடிக்கும் டெலி சீரியஸ் மெட்ராஸ் மேன்சன்
ஆண்டுகள் பல கடந்தும், சென்னை மற்றும் மேன்சன் ஆகிய வார்த்தைகள் பிரிக்க முடியாத விதிகளாகவே உள்ளன, இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. இது ஒரு மையம், இங்கு பல்வேறு வகையான வாழ்க்கைத் தரப்பிலிருந்து வரும் மக்கள், கனவு என்ற ஒற்றை பொதுத்தன்மையில் கூடுகிறார்கள். அவர்களின் மண்டலங்களுக்குள் செல்லுங்கள், நீங்கள் கேட்க, அனுபவபூர்வமாக உணர நிறைய கதைகள் உள்ளன. இல்லையெனில், உங்கள் கேட்ஜெட்கள் மூலம் நேரடியாக வந்து VIU வழியாக உங்கள் வீட்டுக்கு வரும் மெட்ராஸ் மேன்சனில் ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். ஆதித்யா ஷிவ்பிங், வர்ஷிணி பாகல், சுப்பு, அத்துல் ரகுநாத் ஆகியோரோடு அலங்காரமாக சிறப்பு தோற்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், வையாபுரி, சென்றாயன் நடித்திருக்கிறார்கள். சிவா இயக்கியிருக்கிறார்.
நிகழ்ச்சியின் சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி தயாரிப்பாளர் சமீர் கூறும்போது, "ராயப்பேட்டையில் உள்ள ஒரு பழைய மாளிகையின் பின்ன...