
பல வருடங்கள் பிறகு மீண்டும் இணையும் பிரபு மற்றும் மோகன் லால்
பிரியதர்ஷன் நடிப்பில் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘காலபனி’. தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் ரிலீஸான இந்தப் படத்தில், மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் - பிரபு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைகின்றனர். இந்த முறையும் பிரியதர்ஷனே இவர்களை இயக்கப் போகிறார்.
பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கப் போகின்றனர். 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர்.
படத்தில் நடிக்கும் மற்றவர்களி...