
மத்திய அரசுக்கு தாளம் போடும் தமிழக அரசு பிரகாஷ்ராஜ் காட்டம்
சமீபகாலமாக நடிகர்கள் அரசியலில் அதிகம் குரல் கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பிரகாஷ் ராஜ் தமிழ் நாடு மட்டும் இல்லாமல் மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசை பற்றி அதிகமாக விமர்சனம் செய்து வந்தார் அந்தவகையில் இன்று தமிழக அரசியல் நிலையை பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொலை செய்யும் தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையற்ற, முதுகெலும்பு இல்லாத அரசு. மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா. சுற்றுச்சூழல் பிரச்னையை முன்னிறுத்தி மக்கள் நடத்திய போராட்டம் கண்களில் படவில்லையா, அல்லது மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்றபடி ஆட்சி அதிகாரத்தில்...