தமிழ் சினிமாவின் ஒலி தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி ஸ்டுடியோஸ்!
தமிழ் சினிமாவின் ஒலி தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எல்.வி ஸ்டுடியோஸ்!
சென்னை:
தமிழ் திரைப்படத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், உலகத் தரத்திலான ஒலி அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னையில் புதிய மைல்கல்லாக எல்.வி ஸ்டுடியோஸ் ஆட்மாஸ் மிக்ஸ் தியேட்டர் மற்றும் அதிநவீன பதிவு ஸ்டுடியோ தொடங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் மறைந்த எல். வைத்யநாதனின் பாரம்பரியத்தை முன்னெடுத்து வரும் அவரது மகன்களும் இசையமைப்பாளர்களுமான எல்.வி. முத்து கணேஷ் தலைமையில் உருவாகியுள்ள இந்த ஸ்டுடியோ, திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் இசைத் தயாரிப்புகளுக்கான முழுமையான ஆடியோ போஸ்ட் புரொடக்ஷன் மையமாக செயல்பட உள்ளது.
புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவை, முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ். ...
