களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்.
பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத...