Monday, April 20
Shadow

Tag: #pulimurugan #rpbala #mohanlal

புலி முருகனால் பன்முகப் கலைஞராக அவதாரம் தரித்த ஆர்.பி.பாலா

புலி முருகனால் பன்முகப் கலைஞராக அவதாரம் தரித்த ஆர்.பி.பாலா

Latest News
ஒரு நல்ல திரைப்படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டு விடும். அப்படித்தான் 'புலிமுருகன்' என்கிற மொழிமாற்றுப் படம் தமிழில் வரும் போது ஆர்.பி.பாலாவைத் தேடிக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது. கேரளாவில் 180 கோடி ரூபாய் என்று வசூலில் வரலாற்றுச் சாதனை படைத்த படம் தமிழில் 350 திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் இதை ஒரு நேரடித் தமிழ்ப்படமாக மாற்ற உரிய நபரைத் தேடிய போது படத்தை மலையாளத்தில் தயாரித்த முலக்குப் பாடம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் ஆர்.பி.பாலாவை அழைத்திருக்கிறார்கள். வசனம் எழுத ஒப்பந்தம் செய்த பாலாவையே டப்பிங் பணிகளுக்கும் தேர்வு செய்தது மகிழ்ச்சி என்றும், இவர் தகுதியான நபர்தான் என்றும் கேரள சூப்பர்ஸ்டார் மோகன்லால் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட ஆர்.பி.பாலாவுடன் இனி பேசுவோம்..! டப்பிங் கலைஞரான நீங்கள் வசனகர்த்தா, தயாரிப்பாளர் என்று ஆனது எப்படி? ந...