
பார்த்திபனுக்கு ஏமாற்றம் தந்த சென்சார் ரிப்போர்ட்
பார்த்திபன் இயக்கி, தயாரித்துள்ள புதிய படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு - பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தம்பி ராமையா மற்றும் சிங்கம்புலி அண்ணாவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி மற்றும் பையாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்துக்கு சத்யா இசையமைத்துள்ளார். இன்று இப்படம் தணிக்கை குழுவினருக்கு சென்று யு /ஏ சான்றிதழ் பெற்றுள்ளது . ஆனால் பார்த்திபன் யு சான்றிதழுக்கு போராடியும் கிடைக்கவில்லை.
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் சாயல் இதில் இருக்காது. இது வேறு ஒரு வித்தியாசமான களம். கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் என்று பார்த்திபன் தெரிவித்தார்....