ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!
'துருவங்கள் பதினாறு' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது. என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது.
" எங்கள் 'துருவங்கள் பதினாறு' படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .படத்தில் நடிக்க நடிகர் ரகுமான்சார் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம் ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை. அவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமே நன்மையில் முடிய ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை முன்னோக்கி வழி நடத்தியது.
எங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப் ப லம் சேர்த்து எங்களை மேலும் வலுப்பெற வைத்தது. அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் .அது ய...
