முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ளது “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “
விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.
டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு தி...