அமெரிக்கா செல்கிறார் ரஜினி ஏன் தெரியமா
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார். இதற்காக அவரது மக்கள் மன்றத்திற்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தனது அரசியல் பயணத்துக்கு தனது குருவிடம் ஆசி பெறுவதற்காக தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். இமயமலை சுற்றுப் பயணம் முடிந்ததும் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பினார். சிங்கப்பூரில் உள்ள உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றார். அது முதல் அவர் ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று முழுஉடல் பரிசோதனை செய்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்.
இதற்காக அவர் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல...