Monday, April 27
Shadow

Tag: #rajinikanth #vijay #sarkar

சர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை?

சர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை?

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இ (அக்டோபர் 2) நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை தற்போது ‘ பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. அதனால் தான் கலந்துகொள்ள முடியவில்லை என்று ரஜினி தரப்பினர் கூறுகிறார்கள் ....