ஈரோடு யாசினை என் பிள்ளை போல் படிக்க வைப்பேன் – ரஜினிகாந்த் உருக்கம்
ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், கடந்த 11-ம் தேதி காலை பள்ளி இடைவேளையின்போது தனது நண்பர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது.
இதை பார்த்த சிறுவன் யாசின் அந்த பணத்தை அவனுடைய வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து உள்ளான். சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.இந்தச் சிறுவனின் செயலை பொதுமக்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாசினின் வீட்டுக்குச் சென்ற ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனையும், அவனின் பெற்றோர்களைய...
