சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா.
யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக, சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.பெரிதும் எதிர்பார்க்கப்படும்
"ஆண் தேவதை" படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது, "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்க...