விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் “இராவண கோட்டம்”
நேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது 'மதயானைக் கூட்டம்' புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் "இராவண கோட்டம்" என்ற படத்தை இயக்குகிறார்.
மிகவும் புகழ் பெற்ற தொழிலதிபர் திரு.கண்ணன் ரவி, கண்ணன் ரவி குரூப் சார்பில் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார்.
தனது முதல் தயாரிப்பு குறித்து கண்ணன் ரவி கூறும்போது, "வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு, இந்திய மண்ணின், குறிப்பாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த மண் சார்...