பிரஜன் நடிக்கும் அரசியல் கிரைம் திரில்லர் “ பழைய வண்ணாரப்பேட்டை “
கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் வெளியிடும் “ பழைய வண்ணாரப்பேட்டை “
இந்த படத்தில் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். மற்றும் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கானாபாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இது ஒரு பொலிடிக்கல், கிரைம், திரில்லர் படம். பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப்பேட்டையில் தான் அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்க கூடாது என்று ...
