ரெட்ட தலை – திரை விமர்சனம் (Rank 2/5)
ரெட்ட தலை ஒரு படம் அல்ல; அது ஒரு தவறவிட்ட வாய்ப்பின் முழு தொகுப்பு.
அருண் விஜய் போன்ற ஒரு ஆக்ஷன் நடிகரை வைத்து, இரட்டை வேடம், அடையாள மாற்றம், பணம்–அதிகாரம்–பசிக்குரல் போன்ற விஷயங்களை மையமாக வைத்து ஒரு த்ரில்லர் எடுக்கிறேன் என்றால், அதற்கு முதலில் தேவைப்படுவது ஒரு உறுதியான திரைக்கதை. ரெட்ட தலையில் அது இல்லை. இருந்தது எல்லாம் — “சீனு முடிஞ்சா போதும்” என்ற அலட்சியம்.
காளி அனாதையாக வளர்ந்தான், பசி பட்டான், தெருவில் வாழ்ந்தான் என்று சொல்வதோடு படம் நிறுத்திக் கொள்கிறது. அந்த வலி எங்கும் தெரியவில்லை. அவன் வாழ்க்கை அவனை எதற்காக இப்படிப்பட்ட முடிவுகளுக்கு தள்ளுகிறது என்பதை படம் விளக்கவே இல்லை. அதேபோல் அன்த்ரே. “பணம் இல்லாத வாழ்க்கை வேண்டாம்” என்பதற்காக கொலை திட்டம் போடும் அளவுக்கு அவள் மனம் எப்படி கெட்டுப் போனது? அந்தப் பயணம் எங்கே? ஒன்றுமே இல்லை.
அதனால்தான் அன்த்ரே ஒரு பாதிக்கப்பட்ட பெண் போல ...
