புதுமுகங்கள் நடிக்கும் வித்தியாசமான பேய் படம் ரிங் ரோடு
B R எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ரிங் ரோடு.இத்திரைப்படத்தின் கதாநாயகன் சிந்துஜன்.இவருடன் வையாபுரி ,சிசர் மனோகர் ,ரஞ்சன் , தீப்பெட்டி கணேசன் ,கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் இசை நூர் லகான் , ஒளிப்பதிவு கொளஞ்சிக்குமார் , எடிட்டிங் பிரேம் , சண்டை பயிற்சி நோபேர்ட் எரிக் பென்னி போர்ஸ், நடனம் சந்திரிகா.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் AM பாஸ்கர் கூறுகையில்,
இத்திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவுள்ளது.பேய் பட சீசனான ட்ரெண்டினில் முழுக்க முழுக்க ஸ்விட்ஸ்ர்லாந்தில் படமாக்கப்படவிருக்கும் வித்தியாசமான பேய் படமாக ரிங் ரோடு இருக்கும்எனஉறுதியளிக்கிறேன்.இப்படத்தில் புதுமுகம் சிந்துஜன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியிடம் காதலை சொல்லும் வாலிபர்கள் அனைவரும் மர்மமான முறையில் மரணமடைகின்றனர்.ஆன...