பிரேம்ஜி இசையில் ஆர்.கே.நகர் படத்தில் ‘பப்பர மிட்டாய் சென்சேஷனல் ஏற்படுத்திய பாடல்
இசைக்கலைஞர்கள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று சொன்னாலே நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும். குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா, கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்ற மந்திர சாதனையாளர்கள் மத்தியில் பிறக்கும் போது அது இன்னும் சவாலானது. அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவும், தனித்துவமான இசையை கொடுப்பதற்கும் மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, பிரேம்ஜி அமரன் அவர்களின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து இசையை வழங்குவதற்கு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது திறமை ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தில் 'பப்பர மிட்டாய்' என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார்.
ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவ...