ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
கடந்த 1-ஆம் தேதி முதல் துவங்கிய ஃபெஃப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெஃப்சி அமைப்புக்கும் இடையில் கடந்த சில காலங்களாக நடந்து வரும் சம்பள பிரச்சனை காரணமாக நடந்து வந்த இந்த வேலைநிறுத்தம் நடிகர் ரஜினி மற்றும் பல்வேறு தாரப்பினரின் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெறப்படுவதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக முடங்கிப் போன சில படங்களின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு ஏற்கெனவே ஏற்பாடு செய்திருக்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தை திட்டமிட்டபடி நாளை மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது!...